மன்னார் வெள்ளப்பகுதிகளை பார்வையிடும் அரச பாராளுமன்ற உறுப்பினர்கள்

மன்னார் வெள்ளப்பகுதிகளை பார்வையிடும் அரச பாராளுமன்ற உறுப்பினர்கள்

வடக்கு பகுதிகளில் கடும் மழை பெய்து வரும் நிலையில் மன்னாரின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல வீதிகள், கட்டடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. நீர் வழிந்தோட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் தங்கியுள்ளனர். இந்த சூழ்நியில் தேசிய மக்கள் சக்த்தியின் பாரளுமன்ற உறுப்பினர்கள் செல்லத்தம்பி திலகநாதன், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் ஆகியோர் மன்னருக்கு சென்று குறித்த இடங்களை பார்வையிட்டு வருகின்றனர்.

மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்கள், நீர் தேங்கியுள்ள இடங்கள் அடங்கலாக பல பகுதிகளுக்கும் அவர்கள் சென்று பார்வையிட்டு வருவதாக வி மீடியா செய்தியாளர் தெரிவித்துள்ளார். மன்னார் பிரதேச செயலாளர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ ஊழியர்களை சந்தித்து மக்களுக்கு தேவையான வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க ஏற்பாடுகளை செய்யுமாறும், இந்த நிலை தொடர்பில் தாம் உரிய இடங்களுக்கு அறிவித்து தேவையான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் குறித்த பாரளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

நீர் பல இடங்களில் தேங்கியுள்ள நிலையில், அனுமதிகள் தொடர்பில் காத்திருக்காது, உடனடியாக நிலத்தை வெட்டி அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும், அதற்கான அனுமதி மற்றும் இதர நடவடிக்கைகள் தொடர்பில் உரிய தரப்பினருக்கு விளக்கமளித்து, சுமூகமான நிலையை ஏற்படுத்தலாம் எனவும் மக்கள் சிரமமின்றி நல்ல முறையில் வேகமாக வழமையான நிலைக்கு திரும்பவேண்டுமெனவும் திலகநாதன், மற்றும் ஜெகதீஸ்வரன் ஆகியோர் ஆகியோர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

தகவல்
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version