அரச கடன் முகாமைத்துவ சட்டத்தை நாளை (25.11.) முதல் அமுல்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ளது
அரச கடன் முகாமைத்துவ சட்டமூலம் கடந்த ஜூன் மாதம் 7ஆம் திகதி திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அரசு சார்பில் கடன் பெறுதல், கடன் வழங்குதல் மற்றும் பொதுக்கடன் வழங்குதல், கடன் முகாமைத்துவ அலுவலகம் அமைத்தல்
ஆகிய பணிகள் இந்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.