மட்டக்களப்பபு மாவட்ட செயலகத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் விஜயம்

மட்டக்களப்பபு மாவட்ட செயலகத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் விஜயம்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர விஜயம் மேற்கொண்டு உயர் மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் ஒருங்கிணைப்பில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போது மாவட்டத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பாக தெளிவு படுத்தினார்.

இதன் போது கருத்து தெரிவித்த ஆளுநர் இன மத பேதமின்றி நாம் இலங்கையர் எனும் அடிப்படையில் ஊழல் அற்ற தூய்மையான சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர், செயலாளர் எல்.பி.மதநாயக்க, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள்,
பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் , உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version