மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை பெப்ரவரி 25ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்ப கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தினால் அரசாங்கத்திற்கு பத்து பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டில் அவர் சந்தேக நபராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.