முன்னாள் பிரதியமைச்சர் சேகு இஸ்ஸதீன் காலமானார்

முன்னாள் பிரதியமைச்சர் சேகு இஸ்ஸதீன் காலமானார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரரும், முன்னாள் பிரதியமைச்சருமான
எம்.எச். சேகு இஸ்ஸதீன் காலமானார்.

சுகயீனமுற்றிருந்த நிலையில் அக்கரைப்பற்றில் இன்று வியாழக்கிழமை (28.11) அவர் காலமானார்.

இவர் இணைந்த வட-கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் என மக்களினால் அழைக்கப்பட்டார்.

இலங்கையின் அரச ஊடகத்துறையில் தமிழ், முஸ்லிம் பணியாளர்களை கூடுதலான அளவில் நியமித்தல், அரச தமிழ் ஊடகங்களில் தமிழ் மொழிக்கான சம அந்தஸ்து போன்றவற்றில் சேகு இஸ்ஸதீன் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் அவரது சிறுபான்மை அரசியல் பரப்பில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version