மேலும் இரண்டு பரீட்சைகள் ஒத்திவைப்பு

மேலும் இரண்டு பரீட்சைகள் ஒத்திவைப்பு

சீரற்ற வானிலை காரணமாக நடைபெறவிருந்த மேலும் இரண்டு பரீட்சைகள் பிற்படப்பட்டுள்ளதாகப் பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதியும் இரண்டாம் திகதியும் நடைபெறவிருந்த சட்டக்கல்லூரி பொது நுழைவுத் தேர்வும், மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தொடர்பான பரீட்சையும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் தொடர்பில் தொடர்புடைய பரீட்சார்த்திகளுக்கு அறிவிக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version