வருமான வரி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் இன்று

வருமான வரி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் இன்று

2023/2024 வருமான வரி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் இன்று என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

அறிக்கைகள் நிகழ்நிலையில் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப உதவி தேவைப்படுபவர்கள் தலைமை அலுவலகம், பிராந்திய மற்றும் நகர அலுவலகங்களினூடாக தேவையான உதவிகளைப் பெறலாம் என திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் ஜாவத்தை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கிக் கிளையும் வருமான வரி செலுத்துவதற்காக திறந்து வைக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version