மஹரகமவில் வாகன விபத்து – ஒருவர் பலி

மஹரகமவில் வாகன விபத்து - ஒருவர் பலி

மஹரகம பமுன்வ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர புதிய வைத்தியசாலையிலிருந்து பமுன்வ நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது
ஜீப் வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்ததில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து சம்பவித்துள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

பிலியந்த பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் ஜனாதிபதி செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றியவர் என தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் ஜீப் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version