உயிர் பாதுகாப்புக்காக, அதிகபட்சம் ஒரு துப்பாக்கி மாத்திரம் வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட துப்பாக்கிகளுக்கு விண்ணப்பித்தால், பாதுகாப்பு பகுப்பாய்வு நடத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பகுப்பாய்வின் மூலம் வெளிப்படுத்தப்படும் உண்மைகளின் அடிப்படையில் மேலும் துப்பாக்கிகளை வழங்குவதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு பகுப்பாய்வின் போது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படாத பட்சத்தில் துப்பாக்கிகளை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி கணக்கெடுப்பு தற்போது பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் நடத்தப்படுகிறது.
பொதுமக்களுக்காக 1550 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.