அரிசி மற்றம் தேங்காய் தட்டுப்பாடின்றி பெற்றுக்கொள்ள முடியும்

அரிசி மற்றம் தேங்காய் தட்டுப்பாடின்றி பெற்றுக்கொள்ள முடியும்

இன்று முதல் நாளாந்தம் 200,000 கிலோ கிராம் அரிசியை வழங்குவதற்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக
வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“அரசாங்கத்திற்கு சொந்தமான சில்லறை விற்பனை நிலையமான லங்கா சதொச ஊடாக ஒரு கிலோ கிராம் அரிசியை 220 ரூபா கட்டுப்பாட்டு விலையில் பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை நாட்டில் நிலவும் தேங்காய் விலை நெருக்கடிக்கு தீர்வாக அடுத்த 2 வாரங்களுக்குள் 10 இலட்சம் தேங்காய்களை புறநகர் பகுதிகளுக்கு விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, சதொச ஊடாக தேங்காய் ஒன்றினை 130 ரூபாவிற்கு பெற்றுக்கொள்ள முடியும்.

அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டங்களில் கிடைக்கும் தென்னை உற்பத்திகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version