சதொச ஊடாக ஒருவர் 05 கிலோ அரிசி, 3 தேங்காய் மாத்திரமே பெற முடியும்

சதொச ஊடாக ஒருவர் 05 கிலோ அரிசி,  3 தேங்காய் மாத்திரமே பெற முடியும்

லங்கா சதொச நிறுவனத்தினால் 05 கிலோ கிராம் நாடு அரிசி மற்றும் 3 தேங்காய்களை நுகர்வோருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சமித பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

சதொசவில் நாடு அரிசி கிலோவொன்று 220 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைக் கொள்வனவு செய்த பெரும்பாலான வர்த்தகர்கள் வெளியே கொண்டு சென்று
ஒரு கிலோ கிராம் நாடு அரிசியை 240 ரூபாவிற்கு விற்பனை செய்ததாகத் தகவல் கிடைத்தது.

இதனைக் கருத்திற் கொண்டு ஒருவருக்கு 05 கிலோ கிராம் நாடு அரிசியை மாத்திரம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக
லங்கா சதொசவின் தலைவர் கலாநிதி சமித பெரேரா தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version