அரிசி ஆலைகளில் சோதனை நடவடிக்கைகள் தீவிரம்

அரிசி ஆலைகளில் சோதனை நடவடிக்கைகள் தீவிரம்

அரிசியின் விலையைக் கட்டுப்படுத்துவதற்கும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசி மூடைகளை வெளியே கொண்டு வரும் விதமாகவும், புதிய நடைமுறையொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

அந்தவகையில் தொடர்ந்து 10 நாட்களுக்கு அரிசி ஆலைகளை சோதனை செய்யும் நடவடிக்கையினை நுகர்வோர் விவகார அதிகாரசபை முன்னெடுத்துள்ளது.

நாட்டில் நேற்று முதல் 10 நாட்களுக்கு தொடர்ச்சியாக அரிசி ஆலைகளில் சோதனைகள் நடத்தப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டையிலுள்ள அரிசி ஆலைகளில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அரிசி ஆலைகளிலிருந்து நாளாந்தம் விநியோகிக்கப்படும் அரிசி தொகை தொடர்பில் அறிக்கையை பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version