எலிகாய்ச்சல் ஏழு பேருக்கு உறுதி

எலிகாய்ச்சல் ஏழு பேருக்கு உறுதி

யாழ்.மாவட்டத்தில் லெப்டோபைரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சலால் பதிவான உயிரிழப்புகளில்
07 பேருக்கு இந்த காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 76 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தின் பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றும் கரவெட்டி ஆகிய 3 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் லெப்டோபைரோசிஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவிவந்த எலிக் காய்ச்சல் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 28 பேரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 11 பேருமாக மொத்தம் 39 பேர் எலிக் காய்ச்சல் காரணமாக சிகிச்சைப் பெறுவதாகவும் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version