அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது அரிசி தொகுதி நாளை நாட்டிற்கு கிடைக்கபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4ஆம் திகதி முதல் அரிசியை இறக்குமதி செய்யத் தனியார் துறைக்கு அரசாங்கம் அனுமதி வழங்கிய நிலையில், 2,400 மெற்றிக் தொன் அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகச் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் அரிசி தொகை சுகாதாரத் திணைக்களத்தின் தரப் பரிசோதனையின் பின்னர் விடுக்கப்படும் எனச் சுங்கத் திணைக்களப் பேச்சாளர் மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.