பெலியத்த ரயில் விபத்து – மூவர் பணி இடைநிறுத்தம்

பெலியத்த ரயில் விபத்து - மூவர் பணி இடைநிறுத்தம்

பெலியத்த ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் மோதி ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று (15) காலை பெலியத்தவிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் செல்லவிருந்த ரஜரட்ட ருஜின ரயில், பெலியத்த ரயில் நிலையத்தில் தவறான பாதையில் பயணித்ததால் சாகரிகா ரயிலுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசேட விசாரணையை ரயில்வே திணைக்களம் தொடங்கியது.

அதன்படி, இச்சம்பவம் தொடர்பாக மூன்று ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துணைப் பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்தார்.

குறித்த ரயிலகளுக்கு பதிலாக மாற்று ரயில்களை இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version