இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இரங்கல் பதிவேடு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில்

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இரங்கல் பதிவேடு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில்

மறைந்த இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இலங்கையில் இரங்கல் தெரிவிக்கும் முகமாக 2024 டிசம்பர் 30 முதல் 2025 ஜனவரி 1 ஆம் திகதி வரை காலை 10 மணி முதல் மாலை 03 மணி வரை கொழும்பு 03 இலக்கம் 36-38 இல் அமைந்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் இரங்கல் பதிவேடு வைக்கப்பட்டிருக்கும் என இந்திய உயர் ஸ்தானிகராலய ஊடக பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் 2024 டிசம்பர் 26 ஆம் திகதி புது டில்லியில் அவரது 90 வயதில் காலமானார். கலாநிதி மன்மோகன் சிங் 2004 மே 22 ஆம் திகதி முதல் 2014 மே 26 ஆம் திகதி வரை இந்தியாவின் 13 ஆவது பிரதமராக சேவையாற்றியுள்ளார். புகழ்மிக்க பொருளாதார நிபுணராகவும் தொலைநோக்கு சிந்தனைகளைக் கொண்ட தலைவராகவும் கலாநிதி மன்மோகன் சிங் அவர்கள் 1991 முதல் 1996 வரையில் நிதி அமைச்சராக சேவையாற்றி முக்கியத்துவம் மிக்க பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அறிமுகம் செய்து நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு வழிசமைத்திருந்தார்.

பணிவு, புலமை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு பெயர்பெற்ற கலாநிதி மன்மோகன் சிங் அவர்களின் தலைமைத்துவமும் நேர்மையும் தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிப்பதுடன் வலுவான முன்னேற்றம் மற்றும் சேவையின் ஆழமான மரபினை விட்டுச்செல்கிறது. டாக்டர். மன்மோகன் சிங் அவர்களுக்கு 1987 இல் இந்தியாவின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

மறைந்த இத்தலைவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தியா முழுவதிலும் 2024 டிசம்பர் 26 ஆம் திகதி முதல் 2025 ஜனவரி 1 ஆம் திகதி வரையில் ஒருவார கால தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version