
சர்வதேசக் கிரிக்கெட் பேரவையினால் வழங்கப்படும் விருதுகளுக்கான இறுதிப் பெயர்பட்டியல் இன்று சர்வதேசக் கிரிக்கெட் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சிறந்த அறிமுக வீரர், வீராங்கனை, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளுக்கான வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான விருதுகள் பட்டியலில் வெளியிடப்பட்டிருந்தன. இந்த நிலையில் இன்று சிறந்த வீரர், வீராங்கனை மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர் ஆகிய விருதுகளுக்கான இறுதிப் பெயர்ப் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.
சிறந்த வீரர் – ஹரி ப்ரூக்(இங்கிலாந்து), ஜஸ்பிரிட் பும்ரா(இந்தியா), டிரவிஸ் ஹெட்(அவுஸ்திரேலியா), ஜோ ரூட்(இங்கிலாந்து)
சிறந்த வீராங்கனை- சாமரி அத்தப்பத்து(இலங்கை), அமெலியா கெர்(நியூசிலாந்து), அன்னாபெல் சதர்லாண்ட்(அவுஸ்திரேலியா), லோரே வொல்வார்ட்(தென்னாபிரிக்கா)
சிறந்த டெஸ்ட் வீரர் – ஹரி ப்ரூக்(இங்கிலாந்து), ஜஸ்பிரிட் பும்ரா(இந்தியா), கமிந்து மென்டிஸ்(இலங்கை), ஜோ ரூட்(இங்கிலாந்து)
ஏற்கனவே வெளியிடப்பட்ட விருதுகள் விபரம்
ஆண்கள் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளுக்கான இறுதிப் பட்டியல் – வனிந்து ஹசரங்க ( இலங்கை), குஷல் மென்டிஸ்(இலங்கை), அஷ்மதுல்லா ஒமர்ஷாய் (ஆப்கானிஸ்தான்), ஷெர்பன் ருதர்பர்ட் (மேற்கிந்திய தீவுகள்)
மகளிர் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளுக்கான இறுதிப் பட்டியல் – சாமரி அத்தப்பத்து(இலங்கை), ஸ்மிரிதி மந்தானா(இந்தியா), அன்னாபெல் சதர்லான்ட்(அவுஸ்திரேலியா), லோரா வொல்வார்ட்(தென்னாபிரிக்கா)
ஆண்கள் 20-20 போட்டிகளுக்கான இறுதிப் பட்டியல் – பபர் அஸாம்(பாகிஸ்தான்), டிரவிஸ் ஹெட்(அவுஸ்திரேலியா), சிகண்டர் ரஷா(சிம்பாவே), ஆரஷீப் சிங்(இந்தியா)
மகளிர் 20-20போட்டிகளுக்கான இறுதிப் பட்டியல் – சாமரி அத்தப்பத்து(இலங்கை), அமெலியா கேர்(நியூசிலாந்து), ஒர்லா ப்ரென்டர்கஸ்ட்(அயர்லாந்து), லோரா வொல்வார்ட்(தென்னாபிரிக்கா)
சிறந்த அறிமுக வீரர் – கமிந்து மென்டிஸ்(இலங்கை) கஸ் அட்கின்சன்(இங்கிலாந்து), சைம் அயுப்(பாகிஸ்தான்), சமர் ஜோசெப்(மேற்கிந்திய தீவுகள்)
சிறந்த அறிமுக வீராங்கனை – அன்னெறி டெர்க்சன்(தென்னாபிரிக்கா), சஸ்கியா ஹோர்லி(ஸ்கொட்லாந்து ), ஷ்ரேயங்க பட்டில்(இந்தியா), பிரேயா சர்ஜென்ட்(அயர்லாந்)