இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது T20 போட்டி மௌன்ட் மெளன்கனுயில் இன்று(30.12) நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 45 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்களை பெற்றது. இதில் இதில் மார்க் சப்மன் 42(29) ஓட்டங்களையும், மிச்சல் ஹேய் ஆட்டமிழக்காமல் 41(19) ஓட்டங்களையும், டிம் ரொபின்சன் 41 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் வனிது ஹசரங்க 2 விக்கெட்களையும், நுவான் துஷார, மதீஷ பத்திரன ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 141 ஓட்டங்களை பெற்றது. இதில் குசல் பெரேரா 48(35) ஓட்டங்களையும், பத்தும் நிஸ்ஸங்க 37(28) ஓட்டங்களையும், சரித் அசலங்க 20(16) ஓட்டங்களையும் பெற்றனர்.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் ஜேக்கப் டபி 4 விக்கெட்களையும், மட் ஹென்றி, மிச்சல் சன்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெடகளையும், சக்காரி போல்க்ஸ், மிச்சல் பிரேஸ்வல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினர்.