ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சுதந்திரத்தின் பின்னர் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மக்கள் நேய அரசாங்கத்தை உருவாக்கி, அனைத்து மக்களும் ஒன்றிணைந்த அபிவிருத்தியடைந்த இலங்கை பற்றிய கனவை நனவாக்கும் வாய்ப்பு உங்களுக்கும் எமக்கும் கிடைத்துள்ளது என அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது வாழ்த்துச் செய்தியில்

” விட்டுக்கொடுக்க முடியாத இந்தப் பாரிய பொறுப்பு நம் அனைவரின் தோள்களிலும் சுமத்தப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. இந்த நூற்றாண்டின் தவறவிட்ட சாதனைகளை மீண்டும் நாட்டுக்கு வென்று கொடுக்கவும் மக்களின் கனவுகளை நனவாக்கவும், 2025ஆம் ஆண்டு புத்தாண்டில் மேலும் வீரியத்துடனும் உறுதியுடனும் அர்ப்பணிக்க நடவடிக்கை எடுப்போம்” என கூறியுள்உளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version