போராட்டக்காரர்களை காயபப்டுத்த விரும்பவில்லை – ஓய்வு பெற்ற ஷவேந்திரா சிலா தெரிவிப்பு

போராட்டக்காரர்களை காயபப்டுத்த விரும்பவில்லை - ஓய்வு பெற்ற ஷவேந்திரா சிலா தெரிவிப்பு

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற “அரகலய” எனும் போராட்டத்தின் போது ஆயுதமின்றி போராடிய எவரையும் தான் காயப்படுத்த விரும்பவில்லை எனவும், அதன் காரணமாகவே குறைந்தளவு இராணுவ பலத்தை பாவித்ததாக ஓய்வு பெற்றுள்ள பாதுகாப்பு பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இருப்பினும் அந்த நுட்பத்தை ஆட்சியாளர்கள் தவறாக விளங்கிக்கொண்டதாக நேற்று(31.12) நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வில் ஷவேந்திரா சில்வா கூறியுள்ளார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினால் பாதுகாப்பு பிரதானியாக நியமிக்கப்பட்டார்.

இலங்கை இராணுவ வரலாற்றில் இரண்டாவது தளபதியாக கடமையாற்றிய நான்கு நட்சத்திர ஜெனரல், 2022 மே 31 அன்று நான் ஓய்வு பெறுவதற்கு ஏழு மாதங்கள் எஞ்சியிருந்தன. எவ்வாறாயினும், ஆட்சியாளர்கள் என்னை கட்டளைத் தளபதி பதவியிலிருந்து, பாதுகாப்பு பிரதானியாக உத்தியோகபூர்வமாக இடமாற்றம் செய்தனர். சில காலத்திற்குப் பிறகு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது, அந்த நேரத்தில் நான் அரசாங்கத்தின் அனுமதியுடன் வெளிநாட்டில் இருந்தேன், பாதுகாப்பு பிரதானி என்ற அடிபப்படையில் தேசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டேன், ”என பிரியா விடை நிகழ்வில் ஜெனரல் ஷவேந்திர சில்வா சில்வாகூறினார்.

“2022 போராட்டம் உள்நாட்டு கலவரம். போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த குறைந்தபட்ச ராணுவ பலத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நான் உத்தரவு பிறப்பித்தேன். நிராயுதபாணியான பொதுமக்களுக்கு எதிராக அதிகாரத்தைப் பயன்படுத்தும் இரக்கமற்ற கொலைகாரனாக மாற எனக்கு விருப்பமில்லை. எனது நோக்கங்கள் மோசமானவை அல்லது தீயவை அல்ல, அதிகார வெறி கொண்ட ஆட்சியாளர்கள் கூறுவது போல் நான் அரசைக் காட்டிக் கொடுக்க முற்படவில்லை. வெளிநாட்டிற்கோ அல்லது வெளிநாட்டு தூதரகம் ஒன்றிலோ என்னை அடைவு வைக்க விரும்பவில்லை எனவும் அவ்வாறான தாழ்வு மனப்பான்மை இல்லை எனவும் மேலும் தெரிவித்த அவர், போராட்டம் நடைபெற்ற வேளையில் போராட்டக்காரர்களிடம் சிக்குண்டநமது நாட்டின் பிரதமரையும், ஐந்தாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியையும், பத்திரமாக மீட்க நான் ஏன் ஏர் மொபைல் படைப்பிரிவை அனுப்பியிருக்க கூடாது? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version