சாரதி அனுமதிப்பத்திரங்கள் இந்த மாதத்திற்குள் வழங்கப்படும்

சாரதி அனுமதிப்பத்திரங்கள் இந்த மாதத்திற்குள் வழங்கப்படும்

அச்சிடுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 1,30,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் இந்த மாதத்திற்குள்
வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குமார குணசேன தெரிவித்தார்.

போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன மற்றும் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சர்
ஜனித ருவான் கொடித்துவக்கு ஆகியோர் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர வளாகத்திற்கு
மேற்கொண்ட அவசர கண்காணிப்பு விஜயத்தின் போதே இதனைத் தெரிவித்துள்ளனர்.

இணையவழி முறையின் ஊடாக நிறுவனத்தில் சேவைகளை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்
பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்தார்.

இதன்போது, ​​நிறுவனத்தின் கட்டமைப்பு மற்றும் செயற்பாடுகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

தற்போதைய தொழில்நுட்ப முறைகளை நவீன, மிகவும் பயனுள்ளவிதமாக மாற்றுவதன் மூலம் அதனை மிகவும் திறமையான,
சேவை சார்ந்த பொது நிறுவனமாக மாற்றுவதற்கான திட்டங்களை அறிவித்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version