அமெரிக்காவில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவின் சொத்துக்கள் தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி விசாரணை பிரிவில் வாக்குமூலம் பதிவு செய்துள்ளார்.
பசில் ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் தொடர்பில் பல வருடங்களுக்கு முன்னர்
தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் தாம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
விமல் வீரவன்ச தெரிவித்த கருத்துக்கள் தொடர்பான எழுத்துமூல தகவல்கள் பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த விமல் வீரவன்ச
“ பசில் ராஜபக்ச அமெரிக்காவில் வேலை செய்யவில்லை. அமெரிக்காவில் அவருக்குச் சொந்தமான சொத்துக்கள் எதுவாக இருந்தாலும், அவர் இலங்கையில் வேலை செய்து சம்பாதித்த சொத்துக்களே.
சொத்துக்கள் அவரது மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் உள்ளன, தன் வசம் உள்ள தகவல்கள்
அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
மேலும், ராஜபக்சவின் ஏனைய உறவினர்கள் வைத்திருக்கும் சொத்துக்கள் குறித்து என்னிடம் தகவல்கள் இல்லை எனவே அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும்.
ஏனைய ஊழல் அரசியல்வாதிகள் தொடர்பிலும் என்னிடம் தகவல்கள் உள்ளன. அனைத்தையும் ஒரேயடியாக வெளிப்படுத்த முடியாது எனவும்,
ஊழல் அரசியல்வாதிகளை கண்டுபிடிக்க வேண்டுமாயின் பசில் ராஜபக்சவின் அமெரிக்காவில் உள்ள சொத்துக்கள் குறித்து அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும்.
முறையான நியாயமான விசாரணை நடத்தப்பட்டால், ஏனைய ஊழல்வாதிகள் பற்றிய விவரங்களையும் வெளியிடுவேன்” என்றார்.