பாரளுமன்ற உறுப்பினர்களுக்கு டபுள் கப் இல்லையா?

பாரளுமன்ற உறுப்பினர்களுக்கு டபுள் கப் இல்லையா?

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு டபுள் கப் வாகனங்களை இறக்குமதி செய்யும் திட்டம் தற்போதைக்கு இலையென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 100 பேருக்கும் அதிகமானவர்களுக்கு வாகனங்கள் இல்லை எனவும், அவர்கள் பாரளுமன்ற அமர்வுக்கு வருகை தர மிகவும் கஸ்டப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். பாரளுமன்ற உறுப்பினர்களுக்காக டபுள் கப் ரக வாகனங்களை இறக்குமதி செய்யும் திட்டம் இருப்பதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரச வாகனங்களை வழங்குவது எனவும், வாகனங்களை சொந்தமாக வாங்குவதற்கு வரி விலக்கு வழங்குவது இல்லை எனவும் அரசு கொள்கை பிரகடனம் செய்துள்ளது. இந்த வரி விலக்கை தொழிலதிபர்களுக்கு வழங்கி அவர்கள் வரி சலுகைகளை பெற்றுக்கொள்வதனால் அரசாங்கம் நஷ்டம் அடைவதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூறியிருந்தது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக் வாகனங்கள் இல்லாத நிலையில், தற்போது அரசாங்கத்திடம் உள்ள அதி சொகுசு வாகனங்களை ஏலம் மூலம் விற்பனை செய்ததன் பின்னர் எவ்வாறு வாகனங்களை வழங்குவது மற்றும் கொள்வனவு செய்வது தொடர்பில் முடிவு எடுக்கப்படுமென ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திடமுள்ள அதி சொகுசு வாகனங்களுக்கான பெறுமதி கணிப்பீடு நடைபெறுவதாகவும், விரைவில் அவை நிறைவைடைந்து வாகனங்கள் விற்பனை செய்யப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version