![மன்னாரில் துப்பாக்கி சூட்டில் இருவர் காயம்](https://vmedianews.com/wp-content/uploads/2024/08/blue-ocean-jaffna-project.jpg)
மன்னார் நீதிமன்றத்துக்கு முன்னாள் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் புத்திக்க மானதுங்க தெரிவித்துள்ளார். நடைபெற்றுக்கொண்டிருக்கும் வழக்கு விசாரணைகளுக்காக இன்று(16.11) காலை வருகை தந்த இருவர் மீது, மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இனம் தெரியாத இரு நபர்கள் துப்பாக்கி சூடு நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். காயமடைந்தவர்கள் ம் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.