
வடக்கு பூப்பந்தாடா சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வவுனியா, ஓமந்தை உள்ளக அரங்கில் அகில இலங்கை ரீதியிலான பூப்பந்தாட்ட சுற்றுத் தொடர் இன்று(18.01) காலை ஆரம்பித்தது. வவுனியா மாவட்ட செயலாளர் சரத்சந்திர இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் பிரதாபன், விளையாட்டு திணைக்களத்தின் இணைப்பாளர் மற்றும் ஓமந்தை விளையாட்டு அரங்க பொறுப்பாளர் தனுராஜ், வவுனியா மாவட்ட விளையாட்டு அதிகாரி அமலன், வட மாகாண பூப்பந்தாட்ட தலைவர் சுபாஷ்கரன், செயலாளர் பிரின்ஸ் லம்பேர்ட், வட மாகாண பூப்பந்தாடா பயிற்றுவிப்பாளர் கமலன், உலக தமிழர் பூப்பந்தாட்ட பேரவை ஸ்தாபக தலைவர் கந்தையா சிங்கம் ஆகியோர் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இன்று ஆர்மபித்த இந்த தொடர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 571 போட்டியாளர்கள், 11 வயது தொடக்கம் 60 வயதுக்கு மேற்பட்ட வயது பிரிவுகள் வரை பல போட்டிகளில் மோதவுள்ளனர்.