
இலங்கை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் இலங்கை வரலாற்றில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பிலான அதிக பணம் நேற்று(18.01) கைப்பற்றப்பட்டுள்ளது. 2 கோடியே 83 இலட்சம் ரூபா பணம் குருநாகலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தலுக்காக வீடு ஒன்றில் மறைக்கபப்ட்டிருந்த நிலையில் இந்தப் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியிட்டுள்ள பொலிசார், இரண்டு வாகனங்களையும் கைப்பற்றியுள்ளதாக கூறியுள்ளனர்.
சிறைச்சாலையிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் ஒருவரின் பணம் இதுவென பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் குருநாகல் நீதவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளதாகவும் மேலும் கூறியுள்ளார்.