கல் ஓயா வெள்ள அனர்த்த மட்டத்தை அடைந்துள்ளதாக எச்சரிக்கை

கல் ஓயா வெள்ள அனர்த்த மட்டத்தை அடைந்துள்ளதாக எச்சரிக்கை

கல்ஓயா ஆற்றுப் படுகை வெள்ள அனர்த்த மட்டத்தை அடைந்துள்ள நிலையில், நீர்ப்பாசனத் திணைக்களம் மக்ளுக்கான எச்சரிக்கை அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

கல் ஓயா ஆற்றுப் படுகையின் உயர் மற்றும் மத்திய பிரதேசங்களில் குறிப்பிடத்தக்க மழை காரணமாக, கல் ஓயாவின் நீர்மட்டம் வெள்ள மட்டத்திற்கு அண்மித்துள்ளது. இந்த நிலையில் தாழ் நிலப் பகுதிகளில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, அம்பாறை, தமண, எராகம, மடுல்ல, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள நிலமை அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறு அப்பிரதேச மக்களையும் அந்தப் பிரதேசங்களுக்கு ஊடாக பயணிக்கும் வாகன ஓட்டுனர்களிடமும் நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இந்நிலை தொடர்பாக அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல் ஓயா வெள்ள அனர்த்த மட்டத்தை அடைந்துள்ளதாக எச்சரிக்கை
Social Share
FacebookTwitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version