இஸ்ரேல்-பலஸ்தீன் போர் நிறுத்தம் ஆரம்பம்.

இஸ்ரேல்-பலஸ்தீன் போர் நிறுத்தம் ஆரம்பம்.

இஸ்ரேல், பலஸ்தீன் போர் நிறுத்தம் நேற்று(19.01) முதல் ஆரம்பித்துள்ளது. பலஸ்தீன் போராளிகள் முதற் கட்டமாக அவர்களிடமுள்ள பயணக்கைதிகளில் மூன்று பெண்களை விடுதலை செய்தனர். அதுவரை ஹமாஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடாத்தி வந்தது. போர் நிறுத்த சம்மதம் தெரிவித்தும் தாக்குதல் நடத்தபப்ட்டது. பலஸ்தீன் மூவரை விடுதலை செய்ததனை தொடர்ந்து, இஸ்ரேல் 90 பலஸ்தீன் சிறைக்கைதிகளை விடுதலை செய்துள்ளனர். சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இந்த பரிமாற்றத்தை செய்தது. அதனை தொடர்ந்து ஹமாஸ் பகுதிக்கு மனிதாபிமான உதவிப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இரு தரப்பினரும் கோலா கலமாக தங்கள் தரப்புகளை வரவேற்றனர். 15 மாத காலமாக ஹமாஸில் நடைபெற்ற நடைபெற்ற போர் தற்போது நிறைவுக்கு வந்துளளது. இந்த முதற் கட்ட போர் நிறுத்தம் 6 வாரங்களுக்கு நடைமுறைக்கு வந்துள்ளது. இரு தரப்பும் இன்னமும் தங்கள் பக்கமாக உள்ள கைதிகளை முழுமையாக விடுவிக்கவில்லை.

இந்த போர் நிறுத்தத்துக்கு அமெரிக்காவின் தலையீடு முக்கியமானதாக அமைந்ததாகவும், குறிப்பாக இன்று அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப் தலையீடு இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகிய நிலையில், ட்ரம்ப் பதவி ஏற்ற பின்னர் இந்த பிரச்சினைக்கான தீர்வு வரலாம் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்த போரில் ஹமாஸ் பகுதியில் 10,000 அளவிலான மக்கள்’உயிரிழந்துள அதேவேளை, பலர் தங்கள் வீடுகளை விட்டு வேறு பகுதிகளுக்கு குடி பெயர்ந்தும் சென்றுள்ளனர். தற்போதைய போர் நிறுத்தம் ஆர்மபித்துள்ள நிலையில், சிலர் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பி வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version