பொலிசாரின் கடமைக்கு இடையூறு செய்த குற்றத்துக்காக பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்துமாறு அனுராதபுரம் நீதவான் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அனுராதபுரம், ரம்பாவை பகுதியில் பொலிசாரோடு வாய்த்தர்க்கத்தில் அர்ச்சுனா ஈடுபாடுவதும், யாழ்பாணத்திலிருந்து தான் பாராளுமன்றம் செல்வதாகவும் அதன்போது தன்னை மறித்ததாகவும் பொலிசாரை அவதூறாக பேசுவதும் வீடியோ காட்சியாக வெளிவந்திருந்தது. வீதிபோக்குவரது வீதிகளை மீறியுள்ளதாகவும், ஓட்டுனர் அனுமதி பத்திரத்தை பொலிஸார் கோரிய போதும் அவர் அதனை வழங்க மறுத்திருந்தார். அத்தோடு ஜனாதிபதியை இவ்வாறு மறுப்பீங்களா? என்னை ஏன் மறிக்கிறீங்க? பாராளுமன்றம் செல்பவரை உங்களலால் மறிக்க முடியுமா? என கேள்வி எழுப்பி அவர்களை முட்டால்கள் என கூறியதோடு மேலும் பல மோசமான வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டார்.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நிலையில் நீதிபதி குறித்த உத்தரவை இட்டுள்ளார்.