
அடுத்த சில மாதங்களுக்குள் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தேசிய வர்த்தக சபை கேட்போர் கூடத்தில் நேற்று (21.01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஜயந்த சமரகோன் இதனைத் தெரிவித்தார்.
தற்போது நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம் உர விலை அதிகரிப்பு என தெரிவித்தார்.
மேலும், தேங்காய் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி தொழில் துறைக்குத் தேவையான தேங்காய் இருப்புக்களை அவசரமாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாடு சுமார் 1 பில்லியன் டொலர் வருவாயை இழக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார்.