யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை

யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை

பணமோசடி சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷ, இன்று (27.01) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 25 ஆம் திகதி பெலியத்த பகுதியில் யோஷித்த கைது செய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அதன்படி குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில், மேலதிக நீதவான் மஞ்சுல ரத்நாயக்க 5 கோடி ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். அத்தோடு அவருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக யோஷித ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

தற்போது தொடரப்பட்டுள்ள இந்த காணி வழக்கின் பிரதான சந்தேகநபர், யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபோரஸ்ட் ஆவார்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version