யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுபட்டுள்ளனர்.
5 கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீட மாணவர்களின் முறையற்ற செயற்பாடுகளைத் தடுக்க பல்கலைக்கழக நிர்வாகம் முறையாகத் தலையிடத் தவறியமே பணிப்பகிஷ்கரிப்புக்கு முக்கியக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.