யோஷித்தவின் பிணை; சந்தேகங்களுக்கு ஒரு மாதத்தில் பதில் – நீதியமைச்சர்

யோஷித்தவின் பிணை; சந்தேகங்களுக்கு ஒரு மாதத்தில் பதில் - நீதியமைச்சர்

யோஷித்த ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டதனை தொடர்ந்து சட்ட மா அதிபர் திணைக்களம் மீதும், பொது பாதுகாப்பு அமைச்சர் மீதும் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதோடு சிலர் கடந்த அரசாங்கங்கள் செயற்பட்டது போலவே இந்த அரசாங்கமும் செயற்படுவதாக காட்ட முனைகின்றனர். ஆனால் அவற்றுக்கு ஒரு மாத காலத்தில் பதில் கிடைக்குமென நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

யோஷித்த ராஜபக்ஷ பண மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஏதிராக ஒரு மாத காலத்துக்குள் வழக்கு தாக்கல் செய்யப்படுமென அமைச்சர் ஹர்ஷன தெரிவித்துள்ளார். அவருக்கு பிணையே வழங்கப்பட்டுள்ளது எனவும் வழக்கிலிருந்து விடுவிக்கப்படவில்லை எனவும் சிலர் அவர் வழக்கிலிருந்து விடுக்கப்பட்டுள்ளதாக நினைக்கின்றனர் எனவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார். உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு முன்னர் சந்தேக நபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யபபடவேண்டுமெனவுவம் மேலும் அவர் கூறினார்.

யோஷித்த கைது செய்யப்பட்ட சம்பவம் கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்றதாகவும், கடந்த கால அரசியல் தலையீடுகள் காரணமாக அவர் குற்றவாளியாக பெயரிடப்படவில்லை எனவும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version