அமெரிக்க விமான-ஹெலி விபத்தில் எவரும் உயிர்தப்பவில்லை?

அமெரிக்க விமான-ஹெலி விபத்தில் எவரும் உயிர்தப்பவில்லை?

அமெரிக்கா, வொஷிங்டன் பகுதியில் 64 பயணிகளுடன் பறக்க ஆர்மபித்த விமானம் ஒன்று, இராணுவ உலங்குவானூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் இதுவரை எவரும் உயிரோடு மீட்கப்படவில்லை என பாதுகாப்பு தரப்பை மேற்கோள் காட்டி CNN செய்தி வெளியிட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வொஷிங்டன், ரீகன் விமான நிலையத்திலிருத்து கிளம்பிய விமானம், அருகிலுள்ள பொட்டமக் ஆற்றுக்கு மேலாக பரந்த வேளையில், அமெரிக்க இராணுவ உலங்குவானூர்தியுடன் மோதிதில், விமானம் மற்றும் ஹெலிஹாப்டர் ஆகிய இரண்டும் ஆற்றுக்குள் வீழ்ந்துள்ளன.

விமானத்தில் 60 பயணிகள் மற்றும் 4 விமான பணியாளர்கள் பயணித்துள்ளனர். இராணுவ உலங்குவானூர்தியில் 3 இராணுவ பணியாளர்கள் காணப்பட்டுள்ளனர். இதுவரை 18 உடல்கள் மீட்கப்பட்டுளளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“விமானம் விமான நிலையத்தை நோக்கி சரியான மற்றும் வழக்கமான பாதையில் பயணித்துள்ளது. ஹெலிகாப்டர் நீண்ட நேரம் விமானத்தை நோக்கி நேராகச் சென்று கொண்டிருந்தது. இது ஒரு தெளிவான இரவு, விமானத்தின் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன, ஹெலிகாப்டர் ஏன் மேலே அல்லது, கீழே செல்லவில்லை, அல்லது திரும்பவில்லை? விமானத்தைப் பார்த்தீர்களா என்று கேட்பதற்குப் பதிலாக, கட்டுப்பாட்டு கோபுரம் ஹெலிகாப்டரிடம் என்ன செய்ய வேண்டும் என்று ஏன் சொல்லவில்லை,” அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேள்வியெழுப்பியுள்ளார்.

“இது ஒரு மோசமான சூழ்நிலை, இது தடுக்கப்பட்டிருக்க வேண்டும். இது நல்லதல்ல!!!” என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version