இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்காக 8 கோடி ரூபா அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் கலாநிதி A.H.M.H அபயரத்ன தெரிவித்துள்ளார். இந்த தொகைக்குள் செலவினங்களை கட்டுப்படுத்த முடியுமென அவர் மேலும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பாதுகாப்பு தரப்பு மற்றும் ஏனைய திணைக்களங்கள் தங்கள் செல்வினங்களை தாங்களே பார்த்துக்கொள்ளும் எனவும் அவர் மேலும் தெரிவித்துளளார்.
சுதந்திர தின ஒத்திகை நிகழ்வுகள், கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்று வருகின்றன. எதிர்வரும் 4 ஆம் திகதி சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.