குற்றப் புலனாய்வுத் துறையில் மேல் மாகாண ஆளுநர் முறையீடு

குற்றப் புலனாய்வுத் துறையில் மேல் மாகாண ஆளுநர் முறையீடு

பொய்யான குற்றச்சாட்டுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தக் கோரி, மேல் மாகாண ஆளுநர் குற்றப் புலனாய்வுத் துறையில் முறையீடு செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுங்கத்தால் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் 323 கொள்கலன்கள் தொடர்பாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், மேல் மாகாண ஆளுநராக தன்னை குறிவைத்து பல முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சில சமூக ஊடக ஆர்வலர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் துறையிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சில அரசியல்வாதிகள் பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் சமூக ஊடகங்களிலும் எந்த அடிப்படையும் இல்லாமல், ஆளுநரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தெரிவித்த தகவல்களை ஆளுநர் குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்துள்ளார்.

குற்றச்சாட்டுகளை தாம் கடுமையாக மறுப்பதாகவும், குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி தனக்கு நீதி கிடைக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தோற்கடிக்கப்பட்ட குழுக்களின் குற்றச்சாட்டுகளைக் கண்டித்த அதேவேளை, தன் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version