
அமெரிக்கா ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதும் சட்டவிரோதமாக அமெரிக்காவில் உள்ளவர்களை உடனடியாக நாடு கடத்தும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. நவம்பர் 2024 வரை 1,445,549 வெளிநாட்டவர்கள் அமெரிக்கவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக அமெரிக்க குடிவரவு, குடியகல்வு திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன.
இவர்களை உடனடியாக அவர்களது நாடுகளுக்கு திருப்பியனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதற்கு சில நாட்டு அரசாங்கங்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் மேலும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அந்த நாடுகளுக்குள் இலங்கை அடங்கவில்லை. எனவே இலங்கை அமெரிக்காவுக்கு ஆதரவு வழங்கியுள்ளது.
3065 இலங்கையர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர். இவர்களில் அகதி அந்தஸ்து கோரியவர்களும் காணப்படலாம் என நம்பப்படுகிறது. எவ்வாறாயினும் அனைவரும் நாடு கடத்தப்படுவார்கள் என தெரியவருகிறது.