இலங்கை அணியின் டெஸ்ட் வரலாற்றில் மோசமான தோல்வி

இலங்கை அணியின் டெஸ்ட் வரலாற்றில் மோசமான தோல்வி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான வோர்ன் -முரளி கிண்ண முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அவுஸ்திரேலியா அணி இலங்கை அணியை 242 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி மிக சிறப்பாக துடுப்பாடி பலமான நிலையை அடைந்தது. முதல் நாள் மழை காரணமாக குறித்த நேரத்துக்கு முன்னதாக நிறைவுக்கு வந்தது. அவுஸ்திரேலியா அணி 154 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 654 ஓட்டங்களை பெற்று துடுப்பாட்டத்தை நிறைவு செய்தது.

ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாக உஸ்மான் காவாஜா, டிரவிஸ் ஹெட் இணைந்து 92 ஓட்டங்களை பெற்றனர். டிரவிஸ் ஹெட் அதிரடியாக துடுப்பாடி 40 பந்துகளில் 57 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். மார்னஸ் லபுஷேன் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின் ஜோடி சேர்ந்த உஸ்மான் காவாஜா, ஸ்டீவன் ஸ்மித் இணைந்து 266 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். அவுஸ்திரேலியா அணியின் துடுப்பாட்டத்தில் உஸ்மான் காவாஜா 232 ஓட்டங்களையும், ஸ்டீவன் ஸ்மித் 141 ஓட்டங்களையும், அவுஸ்திரேலியா அணிக்காக அறிமுகத்தை மேற்கொண்ட ஜோஸ் இங்கிலிஷ் 102 ஓட்டங்களையும், அலெக்ஸ் கேரி ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஸ்டீவன் ஸ்மித் 10,000 ஓட்டங்களை கடந்தார். டெஸ்ட் போட்டிகளில் 10,000 ஓட்டங்களை கடந்த பதினைந்தாவது வீரராகவும், அவுஸ்திரேலியாவின் நான்காவது வீரராகவும் தனது பெயரை பதிவு செய்துள்ளார். உஸ்மான் காவாஜா தனது 16 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். ஸ்மித் 35 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரபாத் ஜெயசூர்யா, ஜெப்ரி வண்டர்செய் ஆகியோர் தலா 3
விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இரண்டு ஆட்டமிழப்புக்களை நடுவர்கள் வழங்காத நிலையில், அவற்றை இலங்கை அணியும் மீள் பரிசீலனை செய்யாமை இலங்கைக்கு பாதிப்பாக அமைந்தது. ஐந்தாவது ஓவரில் டிரவிஸ் ஹெட்ட்டின் ஆட்டமிழப்பு மற்றும் காவஜா-ஸ்மித் இணைப்பாட்ட வேளையில் மேலுமொரு ஆட்டமிழப்பு என்பன இவ்வாறு தவறவிடப்பட்டன.

பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 52.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 165 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதில் தினேஷ் சந்திமால் 67 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 22 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். குசல் மென்டிஸ் 21 ஓட்டங்களையும், கமிண்டு மென்டிஸ் 15 ஓட்டங்களுடனும், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான திமுத் கருணாரட்ண, ஒஷட பெர்னாண்டோ ஆகியோர் 7 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தனர்.

அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் மத்தியூ குஹ்ன்மென் 5 விக்கெட்களையும், நேதன் லயன் 3 விக்கெட்களையும், மிச்சல் ஸ்டார்க் 2 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

பொலவ் ஒன் முறையில் 2 ஆவது இன்னிங்சில் துடுப்பாடிய இலங்கை அணி ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து ஓட்டங்களை பெற்றது. இதில் ஜெப்ரி வண்டர்சய் 53 ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 41 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 39 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 34 ஓட்டங்களையும், கமிண்டு மென்டிஸ் 32 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 31 ஓட்டங்களையும் பெற்றனர். இறுதி நேரத்தில் அதிரடியாகவும், நிதானமாகவும் துடுப்பாடி ஜெப்ரி வண்டர்சய் உயர்திக் கொடுத்து அவரின் முதலாவது அரைச்சதத்தை பூர்த்தி செய்தார்.

அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் நேதன் லயன்,மத்தியூ குஹ்னமன் ஆகியோர் தலா 4 விக்கெட்களையும், டொட் மேர்பி, மிட்சல் ஸ்டார்க் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version