சிக்குன்குனியா அறிகுறிகளுடன் பலர் அடையாளம்

சிக்குன்குனியா அறிகுறிகளுடன் பலர் அடையாளம்

சிக்குன்குனியா அறிகுறிகளுடன் பல குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குழந்தைகள் நல மருத்துவர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

காய்ச்சல், மூட்டுவலி, உடல்வலி, மூக்கைச் சுற்றி கருப்பு நிறமாற்றம் போன்றவை சிக்குன்குனியாவின் அறிகுறிகளாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற அறிகுறிகள் தொடர்ந்தால் விரைவில் வைத்தியசாலைக்குச் சென்று தேவையான சிகிச்சையைப் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெங்குவை பரப்பும் அதே நுளம்பு சிக்குன்குனியாவையும் பரப்புகிறது எனவே கொசுக்கள் பெருகும் இடங்களை அழிப்பது மிகவும் அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version