அம்பலாந்தோட்டை கொலை சம்பவம் – ஐவர் கைது

அம்பலாந்தோட்டை கொலை சம்பவம் - ஐவர் கைது

அம்பலாந்தோட்டை, மாமடல பிரதேசத்தில் நேற்று (02.02) பிற்பகல் மூவர் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீடொன்றிற்குள் நுழைந்த அறுவர் மூன்று பேர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொண்டனர்.

இதன்போது ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் ஏனைய இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.

சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரிடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறின் விளைவாக இந்தக் கொலை இடம்பெற்றமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Social Share

Leave a Reply