உலகளாவிய பிரஜைகள் என்றரீதியில் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி

உலகளாவிய பிரஜைகள் என்றரீதியில் ஒன்றிணைய வேண்டும் - ஜனாதிபதி

உலகளாவிய பிரஜைகள் என்றரீதியில் அனைவருமு் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

உலக அரச உச்சி மாநாட்டில் நேற்று (12.02)உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மனித வரலாற்றின் தீர்மானகரமான திருப்புமுனையில் இருந்துகொண்டு முன்னொருபோதும் இருந்திராத உலகளாவிய ஒத்துழைப்பினை வேண்டிநிற்கின்ற தருணத்தில் நடாத்தப்படுகின்ற தனித்துவமான மாநாட்டில் உரை நிகழ்த்தக் கிடைத்தமை மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகின்றது.

எனது நாடு வியத்தகு வரலாற்றினையும் எதிர்காலம் பற்றிய சுபமான கனவினைக் காண்கின்ற நிகழ்காலத்தையும் அகல் விரிவான அரசியல் மற்றும் சமூக அறிவினாலும் கட்டி வளர்க்கப்பட்ட பிரஜைகளைக் கொண்ட அழகான தீவாகும்.

அதைப்போலவே உங்கள் கையில் இருக்கின்ற கையடக்கத் தொலைபேசியில் இத்தருணத்தில் இணையத்தளத்தை பரிசீலனைசெய்து பார்த்தால் “உலகில் மிகவும் அதிகமாக கண் தானம் வழங்குகின்ற நாடு எது?” இந்தியப் துணைக்கண்டத்தின் ஓரத்தில் அமைந்துள்ள நான் பிரதிநிதித்துவம் செய்கின்ற நாட்டையே நீங்கள் காண்பீர்கள். அதுவே இலங்கை.

அத்தகைய பொதுநலம் கருதுகின்ற இரக்கமுள்ள இதயம்படைத்த பிரஜைகள் வசிக்கின்ற நாட்டைப் பிரதிநிதித்தும்செய்து உங்கள் முன் உரையாற்றக் கிடைத்ததையிட்டு எனது நாட்டின் பிரஜைகளின் பெயரால் நான் பெருமிதம் அடைகிறேன்.

நிகழ்காலத்தில் நாங்கள் நாடுகள் என்றவகையிலும் பிராந்திய ரீதியாகவும் சர்வதேச மட்டத்திலும் எதிர்நோக்குகின்ற சிக்கல்கள் அளப்பரியவை. அதைப்போலவே சிக்கல் நிறைந்தவையாகும்.

தேச எல்லைகளைக் கடந்து பயணிக்கின்ற சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காக நாங்கள் உலகளாவிய பிரஜைகள் என்றவகையில் ஒன்றிணைய வேண்டுமென்பது மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றது.

அதனால் இந்த சவால்களை எதிர்கொள்வதற்காக கூட்டான உலகளாவிய செயல்வழிமுறையும் ஒருங்கிணைந்த முன்னணியொன்றும் அவசியமாகின்றது.

ஆளுகையின் பொறுப்புக்கூறல் மற்றும் வினைத்திறனை அதிகரித்தல் எதிர்கால உலகிற்கு அத்தியாவசியமாகின்றது. அது பிரஜைகளை தனித்தனியாக கூட்டுமுயற்சியொன்று வரை கொண்டுவருவதற்காக பழக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

நிலைபெறுதகு பெறுமதிகளை அடிப்படையாகக்கொண்ட உலக சமுதாயமொன்றை கட்டியெழுப்புகையில் உலகின் பல்வேறு கலாச்சார மரபுகளின் நன்மதிப்பினைப் பேணிவரவேண்டியதும் முக்கியமானதாக அமைகின்றது.

டிஜிட்டல் சுகாதாரம், புதிய தொழில்நுட்பம் மற்றும் நவீன சுகாதார உபகரணங்கள், சுற்றாடல் சுகாதாரமும் நிலைபெறுதகுதன்மையும், பொருளாதார அபாயநேர்வுமிக்க நாடுகளுக்கான சுகாதாரரீதியான நிதிசார் ஒத்துழைப்பு பற்றிய அடிப்படைக் கவனம் செலுத்தப்படவேண்டியது மிகவும் முக்கியமானதாக அமைகின்றது.

Social Share

Leave a Reply