சம்பியன்ஸ் கிண்ணத்தை அபாரமாக ஆரம்பித்தது நியூசிலாந்து

சம்பியன்ஸ் கிண்ணத்தை அபாரமாக ஆரம்பித்தது நியூசிலாந்து

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் சம்பியன்ஸ் கிண்ணத்தின் முதல் போட்டியாக நேற்று (19.02) பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 60 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 320 ஓட்டங்களை பெற்றது. இதில் டொம் லதாம் ஆட்டமிழக்காமல் ஓட்டங்களையும்,வில் யங் 107(112) ஓட்டங்களையும், க்ளென் பிலிப்ஸ் 61(38) ஓட்டங்களையும் பெற்றனர். நியுஸிலாந்து அணி ஆரம்பத்திலேயே விக்கெட்களை இழந்து தடுமாறியது. 4 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த வில் யங், டொம் லதாம் ஆகியோர் 118 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து அணியை மீட்டெடுத்தனர். 5 ஆவது விக்கெட்டிற்காக ஜோடி சேர்ந்த க்ளென் பிலிப்ஸ், டொம் லதாம் ஆகியோர் 125 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை மேலும் உயர்த்தினர். இது வில் யங்கின் 4 ஆவது சதமாகும். டொம் லதாம் அவரின் 8 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் நசீம் ஷா, ஹரிஸ் ரவுப் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

துடுப்பாட்ட வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்பந்46
வில் யங்பிடி – பஹீம் அஷ்ராப்நசீம் ஷா107113121
டெவோன் கொன்வேBowledஅப்ரர் அஹமட்101720
கேன் வில்லியம்சன்பிடி – மொஹமட் ரிஸ்வான்நசீம் ஷா1200
டேரில் மிச்சல்பிடி – ஷஹீன் ஷா அப்ரிடிஹரிஸ் ரவுப்102400
டொம் லதாம்Not OutNot Out118104103
க்ளென் பிலிப்ஸ்பிடி – பகர் சமான்ஹரிஸ் ரவுப்613834
மிச்சல் பிரேஸ்வல்Not OutNot Out0100
மிச்சல் சன்ட்னர்      
மட் ஹென்றி      
ஜேகப் டபி      
வில்லியம் O ரூக்      
       
Extras  13   
ஓவர்   50விக்கெட்  5மொத்த ஓட்டம்  320   
பந்துவீச்சாளர் ஓவர்ஓ.ஓவர்ஓட்டம்  விக்கெட்Economy
ஷஹீன் ஷா அப்ரிடி100068006.80
நசீம் ஷா10006326.30
அப்ரர் அஹமட்10004714.70
ஹரிஸ் ரவுப்10008328.30
குஷ்தில் ஷா07004005.71
சல்மான் அகா03001505.00

பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 47.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 260 ஓட்டங்களை பெற்றது. இதில் குஷ்தில் ஷா 69(49) ஓட்டங்களையும், பாபர் அசாம் 64(90) ஓட்டங்களையும், சல்மான் அகா 42(28) ஓட்டங்களையும் பெற்றனர்.

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் வில்லியம் O’ ரூக், மிச்சல் சன்டனர் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், மட் ஹென்றி 2 விக்கெட்களையும், மிச்சல் பிரேஸ்வல், நேதன் ஸ்மித் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினர்.

துடுப்பாட்ட வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்பந்46
சவுத் ஷகீல்பிடி – மட் ஹென்றிவில்லியம் O ரூக்061900
பாபர் அசாம்பிடி – கேன் வில்லியம்சன்மிச்சல் சன்ட்னர்649061
மொஹமட் ரிஸ்வான்பிடி – கிளென் பிலிப்ஸ்வில்லியம் O ரூக்031400
பகர் சமான்Bowledமிச்சல் பிரேஸ்வல்244140
சல்மான் அகாபிடி –  மிச்சல் பிரேஸ்வல்நேதன் ஸ்மித்422861
தய்யப் தஹிர்பிடி – கேன் வில்லியம்சன்மிச்சல் சன்ட்னர்010500
குஷ்தில் ஷாபிடி –  மிச்சல் பிரேஸ்வல்வில்லியம் O ரூக்6949101
ஷஹீன் ஷா அப்ரிடிபிடி – டொம் லதாம்மட் ஹென்றி141301
நசீம் ஷாBowledமட் ஹென்றி131501
ஹரிஸ் ரவுப்பிடி – டேரில் மிச்சல்மிச்சல் சன்ட்னர்191003
அப்ரர் அஹமட்Not OutNot Out000000
       
Extras  05   
ஓவர்   47.2விக்கெட்  10மொத்த ஓட்டம்  260   
பந்துவீச்சாளர் ஓவர்ஓ.ஓவர்ஓட்டம்  விக்கெட்Economy
மட் ஹென்றி7.212523.40
வில்லியம் O ரூக்0904735.22
மிச்சல் பிரேஸ்வல்10013813.80
கிளென் பிலிப்ஸ்090063007.00
மிச்சல் சன்ட்னர்100066036.60
நேதன் ஸ்மித்0200200110.00

இந்த போட்டியின் நாயகனாக டொம் லதாம் தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version