
கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்வதற்கு உதவிய வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இதனைத் தெரிவித்தார்.
கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் புத்தளம் பாலாவி பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 34 வயதான நபரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கனேமுல்ல சஞ்சீவ, விசாரணைகளுக்காக பூஸா சிறைச்சாலையிலிருந்து புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட சந்தர்ப்பத்தில் நேற்று காலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.