
அம்பலாங்கொடை குருந்துவத்த பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பாடசாலை மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த மாணவி எல்பிட்டிய குற்றப்பிரிவு அதிகாரிகளால் நேற்று (20.02) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சிறுமி அம்பலாங்கொடையில் உள்ள ஒரு அரசுப் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 17 வயது மாணவி என தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் சகோதரர் மூன்று நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் இல்லாத நேரத்தில், அவரது மனைவி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.