
மட்டக்களப்பு மார்க்கத்தின் கல்ஓயா – மின்னேரியா ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளான 06 யானைகளும் உயிரிழந்துள்ளன.
8 யானைகள் நேற்றிரவு(19.02) ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த மீனகயா கடுகதி ரயிலிலேயே யானைகள் மோதி விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் ரயில் தடம்புரண்டதால் மட்டக்களப்பு மார்க்கத்தில் ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.