இலங்கையும் இந்தியாவும் இணைந்து சம்பூரில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி

இலங்கையும் இந்தியாவும் இணைந்து சம்பூரில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி

திருகோணமலை, சம்பூரில் மொத்தம் 120 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கு இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

முதல் கட்டத்தில் 50 மெகாவோட் சூரிய மின் உற்பத்தி நிலையம் மற்றும் இரண்டாம் கட்டத்தில் 70 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் என இரண்டு கட்டங்களாக இத்திட்டம் செயற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியானது இலங்கை மின்சார சபை மற்றும் இந்தியாவின்தேசிய அனல் மின் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக கட்டுமானம், உரிமை மற்றும் செயற்பாட்டு அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

இலங்கை மின்சார சபை மற்றும் இந்தியாவின்தேசிய அனல் மின் நிறுவனத்தின் கூட்டு முயற்சியாக,
சம்பூர் நிலக்கரி மின் திட்டத்திற்காக திருகோணமலை பவர் கம்பனி லிமிடட் மூலம் 50 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version