மித்தெனிய துப்பாக்கிச் சூடு சம்பவம் – மூவர் கைது

மித்தெனிய துப்பாக்கிச் சூடு சம்பவம் - மூவர் கைது

மித்தெனிய, கல்பொத்தயாய பகுதியில் தந்தை மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை
ஒன்றை வெளியிட்டபோது இதனைத் தெரிவித்தார்.

கடந்த 18 ஆம் திகதி இரவு மித்தெனிய பகுதியில் தனது குழந்தைகள் இருவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபரொருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தந்தை மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரின் மகள் மற்றும் மகன் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version