
ஜா-எல பமுணுகம, மோகன்வத்த கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு (21.02) இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிதாரி கடவத்தை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்..
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.