
நாளை (24.02) முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியான வாநிலை நிலவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது