சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 32 இந்திய மீனவர்கள் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 32 இந்திய மீனவர்கள் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 32 பேர் கைது செய்துள்ளனர்.

வடமத்திய மாகாண கடற்படை தலைமையில் , கூட்டு ரோந்து நடவடிக்கையின் போதே, இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை (23.02.25) அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெஃப்டினன் புத்திக்க சம்பத் தெரிவித்துள்ளார்.

இதன்போது 05 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் தமிழ்நாடு இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தாங்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டதாக இந்திய மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version